பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா? – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரும் வழக்கின் விசாரணை தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் தரப்பு வாதம்.
தீர்மானம் நிறைவேற்றம்:
கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு செல்லும், தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பமில்லை, தீர்மானங்கள் குறித்த வழக்கை சிவில் வழக்காக தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
ஓபிஎஸ் தரப்பு வழக்கு:
இதையடுத்து, ஜூலை 11இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி மனு:
எம்எல்ஏவும், வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் நடக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ நியமித்தது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனோஜ் பாண்டியன் தொடந்த வழக்கை நீதிபதி செந்தில் குமார், ராமமூர்த்தி விசாரித்து வருகின்றனர். அப்போது, ஓபிஎஸ் தரப்பு வாதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டுள்ளன.
ஓபிஎஸ் தரப்பு வாதம்:
பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சிகள் கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் விதிமுறைகளுக்கு எதிரானது. விளக்கம் அளிக்க வாய்பளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயற்கை நீதிக்கு எதிரானது:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும், பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியில் இருந்து நீக்குவத்து தொடர்பான அஜெண்டா பொதுக்குழு நிகழ்வில் இல்லை, எங்களை நீக்கியது இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, தீர்மானத்தின் அடிப்படையில் இபிஎஸ் தரப்பு செயல்பட தடை விதிக்க வேண்டும் ஈன ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.