ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், “கோவிட்-19 சூழலின் நெருக்கடியைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் மக்கள் விரோத அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே விரோதமானது”.
பாஜக அரசின் முடிவு எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு மாநில அரசுகள் விவசாயக் கடன் வழங்குவதற்குத் தடையாக இருக்கும்; பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடன்களைக் கூட ரத்து செய்ய முடியாத நிலையை மாநில அரசுகளுக்கு உருவாக்கும்.மாநில உரிமைகளையும் – விவசாயப் பெருங்குடி மக்கள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாக்க, கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் பாஜக அரசுக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திட வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அடிப்படையை மாற்றி – தனது சொந்த அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த பாஜக கொண்டு வரும் அவசரச்சட்ட முயற்சியை உடனே கைவிட வேண்டும்.மாநிலங்களின் 1540 கூட்டுறவு வங்கிகளை (1482 நகர்ப்புற & 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…