வாகன இன்சூரன்ஸ் ஆவணங்கள் ஒரிஜினலா? போலியா? – விரைந்து ஆய்வு செய்க
போலி வாகன இன்சூரன்ஸ் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு.
வாடிக்கையாளர்களிடம் இருக்கும் இன்சூரன்ஸ் ஆவணங்கள் போலியா? ஒரிஜினலா? என அந்தந்த நிறுவனங்கள் ஆய்வு செய்ய சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. வாகன காப்பீடு மோசடி விவகாரத்தில் அரசு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
6 பேர் கொண்ட கும்பல் லட்சக்கணக்கில் போலி வாகன காப்பீடு ஆவணங்களை தயாரித்திருக்கலாம் என்பதால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போலி வாகன இன்சூரன்ஸ் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளார்.
வாகன காப்பீடு மோசடியில் கைதான நெல்லை மாரியப்பன் உள்பட 6 பேரை காவலில் எடுக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுபோன்று பல இடங்கள் போலி ஆவணங்கள் தயாரிப்பு நடந்து வருவதால் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.