அதிமுகவினர்கள் புனிதர்களா? கோடநாடு பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? – சீமான்
அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை வெளியிடுகிறாரா அண்ணாமலை என்று சீமான் கேள்வி.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், தமிழகத்தில் கடலூரில் விவசாய நிலங்களை அழித்து NLC நிலம் கையகப்படுத்துகிறது. விவசாயிகளை மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. விவசாயங்களை அழிப்பது ஏற்புடையது அல்ல என குற்றச்சாட்டினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்திக்கிறார். அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசி வருகிறார். திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை அதிமுகவினர் செய்த ஊழல் பட்டியல்களை ஏன் வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பினார். இதுபோன்று, கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு குறித்து ஏன் அண்ணாமலை வாய் திறக்கவில்லை.
அதிமுகவினர்கள் புனிதர்களா?, கோடநாடு பங்களாவில், அங்கே 24 மணிநேரமும் மின் இணைப்பு இருக்கும். ஆனால், கொள்ளை, கொலை சம்பவத்தன்று மின் இணைப்பை துண்டிக்க சொன்னது யார்? எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு உள்ளது என விமர்சித்தார். தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும், ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் இருக்கிறார்கள்.
அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை வெளியிடுகிறாரா எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை நடைபயணம் மூலம் தாமரை தமிழ்நாட்டில் மலராது, தண்ணீரில் தான் மலரும். பாஜக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்திற்கு என்ன செய்தது?, அடுத்த பிரதமராக மோடி வந்தால் நாட்டையே அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்றும் கூறினார்.