நாமக்கலில் கடந்த புதன்கிழமை அன்று பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டதுக்கு தலைமை தாங்கி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,”திமுக மூத்த தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்து விட்டார்”,என்ற தவறான தகவலை கூறிய நிலையில்,இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து,அண்ணாமலையில் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆற்காடு வீராசாமி அவர்களின் மகனுமான கலாநிதி வீராசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன்.அவர் நலமாக உள்ளார்”,என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,நாமக்கல் பொதுக்கூட்டத்தில் ஆற்காடு வீராசாமி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என தவறுதலாக கூறிய கருத்துக்காக வருந்துகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை கூறுகையில்:”உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்”,என்று தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…