இனி தப்பமுடியாது தனிமைப்படுத்தப்பட்டவர்கள்…புதிய செயலியை உருவாக்கிய S.P அரவிந்தன்

Published by
kavitha

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13  பேர் மடிந்துள்ளனர்.இன்று ஒருவர் நேற்று ஒருவர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவ பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image result for co Buddy aravindhan ips

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப் பட்டவர்களில் 5 பேர்  வெளியே சுற்றித்திரிந்ததாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.திருவாரூர் மாவட்டத்திற்கு பல நாடுகளில் பணிபுரிந்த 605 பேர் தங்களது சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவர்கள் அனைவரையும் வீட்டியிலே மருத்துவரின் அறிவுறுத்தல் படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தனிமைப் படுத்தப்பட்டவர்களில் 5 பேர்  வீட்டில் இருந்து வெளியேறி சுற்றி திரிந்தாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

 

இந்நிலையில் இவர்களை கண்காணிக்க தமிழகத்தில் முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ் புதிய முயற்சி ஒன்றை  எடுத்து உள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினீயரான அரவிந்தன் ஐ.பி.எஸ் தற்போது Co buddy என்கிற புதிய செயலியை இன்ஜினீயர் விஜய் ஞானதேசிகன் என்பவருடன் இணைந்து 48 மணி நேரத்தில் உருவாக்கி அசத்தி உள்ளார். இச்செயலி மூலம் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில்  தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களின் செல்போன்களில் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை போலீஸார் அதிதீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றுக்கூட மதுரை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பி சம்பவம் பீதியடைய செய்தது.அவரை தேடிய அலைந்த போலீசார் இளைஞர் தனது காதலி சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்று அங்கு இருந்துள்ளதாகவும் பின்னர் முகாமுக்கு வந்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் அரவிந்தன் அவர்களின் செயலியால் தொற்று அறிகுறி இருப்பவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தாலே இதன் பாதிப்பு பெருமளவு குறைந்து விடும் என்கின்றனர்  சுகாதாரத்துறையினர்.இக்கட்டான சூழ்நிலையில் புதிய செயலியை உருவாக்கி அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ள எஸ்பி அரவிந்தன் ஐபிஎஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Published by
kavitha

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

1 hour ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

4 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

4 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

6 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

6 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

6 hours ago