மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன்(வயது 89),கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் ,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில்,அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார்.இவர் அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.வெங்கடசாமி என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து,மறைந்த அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் அவர்களின் இறுதி சடங்குகள் இன்று காலை மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி இறுதி சடங்குகள் நடைபெறும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…