இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் – அண்ணாமலை
பெண்களை பற்றி தவறாக பேசும் திண்டுக்கல் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என அண்ணாமலை பேச்சு.
கடலூரில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம்.வெங்காய அரசாங்கம் என பெரியார் கூறினார். இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சந்தேகம் இருந்தால் இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும் என்ற புத்தகத்தை படியுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தி எதிர்ப்பு என்பது தேவையில்லை என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்; பெண்களை பற்றி தவறாக பேசும் திண்டுக்கல் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எமி ஜாக்சன்,ஹன்சிகா மோத்வானி என திமுகவின் பட்டத்து இளவரசர் அடுத்தடுத்து படங்களை நடித்தார்: தமிழில் உள்ள ஒரு சகோதரிகளுடன் கூட நடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூரில் பாஜக வேகமாக வளர வேண்டும் என்றே இந்த போராட்டத்தில் கடலூரில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளேன்; ஏழைத்தாய்மார்களுக்கு நேர்மையான ஆட்சி வேண்டும் என தெரிவித்துள்ளார்.