அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி : பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார்.
அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி.அரவக்குறிச்சி அடுத்த சேந்தமங்கலம் ஆர்.எல்லப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து கிராமத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.