அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை கொலை.! ஒருவர் கைது.!

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நேற்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆன போதிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள் அந்த சிறுமையை பல இடங்களில்தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.
இன்று வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில், சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.