அரபிக்கடல் பகுதிக்கு புயல் செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : ஆர்.பி.உதயகுமார்
புயல் அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறுகையில் புயல் பாதித்த பகுதிகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், புயல் அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரிடர் மேலாண்மை வாரியத்தை பாராட்டியதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிர்களை காக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.