அரபிக்கடலில் உருவானது "லூபன் புயல்"…! வானிலை ஆராய்ச்சி மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
அரபிக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு சென்னை வானிலை மையம் “லூபன் ” என்று பெயரிட்டுள்ளனர். இந்த புயல் ஓமானில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். அடுத்த 2 நாட்களில் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.