ஏப்.28 தான் கடைசி நாள்! முழு ஆண்டு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
பள்ளிகளின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 28-ஆம் தேதி தான் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழக்கத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்கவும், இதுபோன்று 4 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் 28-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் 28-ஆம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பள்ளிகளின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 28-ஆம் தேதி தான் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கி இருக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 20ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.