ரஜினிகாந்த் புதிய பார்முலா!தமிழ் புத்தாண்டில் கட்சி பெயர்,கொடி அறிவிப்பு ?
அரசியல் அறிவிப்புக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் , இமயமலை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கு 15 நாட்களுக்கு மேல் தங்குகிறார்.
அரசியல் அறிவிப்புக்கு இடையில் அவர் இமயமலை பயணம் மேற்கொண்டு இருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், ரஜினிகாந்த் அதை பொருட்படுத்தவில்லை. அவருடைய அரசியல் அடித்தளத்துக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறார். அதன் ஒரு பகுதிதான் நிர்வாகிகள் நியமனம் ஆகும்.
இமயமலையில் இருந்து திரும்பியதும் ரஜினிகாந்த், அரசியல் பணிகளில் வேகம் காட்ட இருக்கிறார். அதன் முதல் அடித்தளம்தான் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்வது. அந்தவகையில், ஏற்கனவே ரஜினிகாந்தின் கட்சிக்கு கொடி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், கட்சியின் பெயருக்காக 10 பெயர்கள் தேர்வுக்கான பட்டியலில் இருப்பதாகவும், மக்களை கவரும் விதமாகவும், அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை தரும் வகையிலும் பெயர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சி கொடி மற்றும் பெயரை நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி அறிமுகம் செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பிரமாண்ட மாநாடு நடத்தவும், மாநாட்டுக்கான இடத்தை திருச்சியிலோ அல்லது சென்னையிலோ தேர்வு செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.