இத்தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி
உள்நாட்டு மீனவர்களை அடையாளம் காணாததும், எச்சரிக்கை வழங்கியும் படகு நிற்காததால் சுட்டோம் எனக் கூறுவதும் ஏற்க முடியாது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த சம்பந்தப்பட்ட படகு நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக நின்றது. அதனை சோதனைக்காக நிறுத்த கூறினோம். ஆனால், அவர்கள் நிறுத்தவில்லை. அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவே துப்பாக்கியால் சுட்டோம். அதில் தவறுதலாக வீரவேல் மீது குண்டடிபட்டது என விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர்பக்கத்தில், தமிழக மீனவரை இந்திய கடற்படையினர் சுட்டது கண்டனத்திற்குரியது. உள்நாட்டு மீனவர்களை அடையாளம் காணாததும், எச்சரிக்கை வழங்கியும் படகு நிற்காததால் சுட்டோம் எனக் கூறுவதும் ஏற்க முடியாது. இத்தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ‘ என பதிவிட்டுள்ளார்.
தமிழக மீனவரை இந்திய கடற்படையினர் சுட்டது கண்டனத்திற்குரியது.
உள்நாட்டு மீனவர்களை அடையாளம் காணாததும், எச்சரிக்கை வழங்கியும் படகு நிற்காததால் சுட்டோம் எனக் கூறுவதும் ஏற்க முடியாது.
இத்தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். @rajnathsingh @SpokespersonMoD https://t.co/XgEQ7zGfcO— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 21, 2022