தற்காலிக ஆசிரியர் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து, தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.