TNPSC-க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேவையான உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், அந்த வகையில் 5 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது. தமிழ்நாடு அரசின் பரிந்துரை ஏற்று டி.என்.பி.எஸ்.சிக்கு ஐந்து புதிய உறுப்பினர்களைநியமனம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கூட்டணி வேண்டுமென்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் – கே.பி.ராமலிங்கம்..!
அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி சிவனருள், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், சென்னை சேர்ந்த மருத்துவர் தவமணி, திருவல்லிக்கேணியை சார்ந்த உஷா, கோவையை சார்ந்த ஸ்ரீ நாராயணகுரு, மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.