அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமனம் !
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதன் படி அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன், எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, பெஞ்ஞமின், ராஜன் செல்லப்பா மற்றும் பால கங்கா ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம்.
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மாற்றம்.#admk pic.twitter.com/0chIwbIOkM
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 13, 2022