ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு நியமனம் – காங்கிரஸ் அறிவிப்பு.!
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, திருப்பத்தூர், தென்சிகாசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஊரக உள்ளாட்சி தேர்தலின் தேதி அறிவிப்புக்கு பின்னர், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுக்கள் நியமனம் செய்து அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றிட காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தற்போது அறிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வென்றது என்பது குறிப்பித்தக்கது.
நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றிட காங்கிரஸ் கட்சி சார்பில் கீழ்க்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது. – தலைவர் திரு @KS_Alagiri pic.twitter.com/PxMcoc0enG
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 16, 2021