முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம்..! ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் – திருமாவளவன் குற்றச்சாட்டு

Default Image
  • பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார்.
  • முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம் என்பது ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  உருவாக்கப்பட்டு  மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்தது மத்திய அரசு.இதனையடுத்து பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம் என்பது ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும். நாடு விடுதலைப் பெற்ற பின்னர் இதுவரை இல்லாத ஒரு புதிய மரபை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.வழக்கத்துக்கு மாறான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, பல்வேறு ஊகங்களுக்கும், அய்யங்களுக்கும் இடமளிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்