பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நியமனம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

Default Image

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசனை நியமித்து தமிழக அரசு அரசாணை.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ச.கருத்தையாபாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்னன், கே.மேக்ராஜ் மற்றும் முனைவர்கள் மதியழகன், சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களது பதவி விலகலை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.பாரதிதாசன் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்