கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் – அதிமுக தலைமை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நத்தம் விஸ்வநாதன் செங்கல்பட்டு மாவட்டத்துக்கும், எஸ் ராமசந்திரன் மற்றும் என் முக்கூர் சுப்பிரமணியன் வேலூர் மாவட்டத்துக்கும், ராஜலட்சுமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்- 2021
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் – கூடுதல்#Local_elections #AIADMK @Rajalakshmioffl pic.twitter.com/H6QCULFyPU
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 13, 2021