மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் 300 மாணவர்கள் நியமனம் – சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வீட்டு தனிமையில் இருக்க கூடிய நபர்களை கண்காணிக்க மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் 300 மாணவர்களை மாநகராட்சி சார்பாக நியமனம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 135 மாணவர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மருத்துவர்கள் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களின் உடல்நிலை குறித்து அறியும் பணியை துவங்க உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். தற்காலிகமாக பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மாதம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் மேலும் 10,000 படுக்கைகளை உருவாக்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.