வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் – சத்ய பிரதா சாகு
வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்களர் பணிகளை பார்வையிட உள்ளனர். 1 கோடி 64 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுமக்கள் அவர்களுடைய விவரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும்..சரிசெய்யப்பட்ட பின் புதிய வாக்களர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.