35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் பல இடங்களில் கேட்டு அர்ச்சனை செய்துவருகிறார்கள். ஆகம விதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அதில், 35 வயது கடந்தவர்கள் 75 பேர் உள்ளனர். இதனால், 35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்துதான் ஆக வேண்டும். அதுபோல் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என தெரிவித்தார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …