தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்.!

தமிழகத்தில் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மருத்துவ கல்லூரிகள உள்ளன.
அதில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பி. வி. எஸ். சி., – ஏ. ஹெச்), உணவு கோழியின மற்று பால்வளத்துறை தொழில்நுட்ப படப்பிடிப்பு(பி. டெக்) ஆகிய பாட பிரிவுகளில் இணைவதற்கான பிளஸ் டூ படிப்பு முடித்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 24முதல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைனில் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணி முதல் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி செப்டம்பர் 28ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025