மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விபரங்கள்.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி
விவரங்கள் www.tn.gov.in/department/30(Social Welfare and Women Empower Department) шmb www.tncpcr.tn.gov.in (Tamil Nadu Commission for Protection of Child Rights) என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (Pass-Port Size) 14.10.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் : செயலர்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். நெ.183/1.ஈ.வே.ரா.பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10.
முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…