இசை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – தேடல் குழு அறிவிப்பு!
சென்னை:தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
அதன்படி,தகுதியானவர்கள் http://tnjjmfau.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு தெரிவித்துள்ளது.
தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் என்ற பெயரானது,மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பெயரில் செப்டம்பர், 2019 முதல் “தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம்” எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.31 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இசைப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட, 11 டிசம்பர் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
இந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட இசை படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இளங்கலை மற்றும் முதுகலை இசை (M. A (Music):
வாய்ப்பாட்டு,வயலின்,மிருதங்கம்,நாகஸ்வரம்,பரத நாட்டியம்,இசையியல்
இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A)
ஓவியம்,கட்புலத் தொடர்பாடல்,
பட்டயப் படிப்புகள் (3 ஆண்டுகள்)
இசை மற்றும் கவின் கலைகள்
சான்றிதழ் படிப்புகள் (2 ஆண்டுகள்)
வாய்ப்பாட்டு,வீணை,வயலின்,மிருதங்கம் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.