தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) நடத்தப்படுகிறது. இது வரும் ஜூலை மாதம் சிடெட் தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், https://ctet.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். CTET 2020 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24 என்றும், விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 27-க்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் : 24 ஜனவரி 2020
விண்ணப்பப் பதிவு முடியும் நாள் : 24 பிப்ரவரி 2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 27 பிப்ரவரி 2020
தேர்வு நடைபெறும் நாள் : 5 ஜூலை 2020
இந்நிலையில், மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் பணியில் சேர சி.பி.எஸ்.இ.யால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல்தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது. மேலும், சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…