சென்னை : மாற்று திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த விருதுகள் தனி நபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது. தனிநபர் பிரிவுகளில் 5 பிரிவுகளின் கீழும், அமைப்பு பிரிவுகளின் கீழ் 8 பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்ப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத்திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால். தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களை www.disabilityaffairs.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய விண்ணப்பங்களை www.awards.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று…