தேசிய விருது வேண்டுமா.? மாற்று திறனாளிகள் நலத்துறையின் முக்கிய அறிவிப்பு.!

Disabled Persons Welfare

சென்னை : மாற்று திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த விருதுகள் தனி நபர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது. தனிநபர் பிரிவுகளில் 5 பிரிவுகளின் கீழும், அமைப்பு பிரிவுகளின் கீழ் 8 பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்ப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் அமைப்புகள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத்திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால். தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் / நிறுவனங்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களை www.disabilityaffairs.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், உரிய விண்ணப்பங்களை www.awards.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்