அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம் தொடங்குகிறது!

Default Image

தமிழ்நாடு அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி நான்காண்டு இளங்கலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக Govt College of Architecture and Sculptureபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இதனையடுத்து, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காரணமாகவும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம், இணைய வாயிலாக ஜூலை மாதம் 15-ம் தேதி  தொடங்கியதாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் விண்ணப்பம் தொடங்கியதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி நான்காண்டு இளங்கலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. அதன்படி மாணவர்கள் https://www.artandculture.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்