நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர்!
வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் சிலை வெளியில் எடுத்து 48 நாள்கள் பூஜை நடத்துவார்கள். பின்னர் 48 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் தெப்பக்குளத்தின் அடியில் அத்திவரதர் சிலையை வைத்து விடுவார்கள்.
கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அத்திவரதர் வசந்த் மண்டபத்தில் சயன கோலத்தில் கடந்த 31 நாள்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்நிலையில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17 -ம் தேதி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.இன்று காலை 5 மணி முதல் பொது தரிசனம் திறக்கப்பட்டது.