#BREAKING: நேரடி வகுப்புக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு..!
தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடத்த தடைகோரி முறையீடு
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்பு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு காரணமாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்பு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அப்துல் வஹாபுதீன் முறையீடு செய்துள்ளார். நேரடி வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கை உடனடியாக அவசர வழக்காக எடுக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இன்று மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து விசயங்களிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.