#BREAKING: மதுக்கடைகளை மூட உத்தரவிடுமாறு உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு.
தமிழகத்தில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை தடுக்க முன்பு மாதிரி முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை எடுக்கவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிவருகின்றனர். இதைத்தொடர்ந்து, முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவரச வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்.
இதைத்தொடர்ந்து, மனுவாக தாக்கல் செய்தல் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை அமர்வு தெரிவித்துள்ளது.