மாணவர்களுக்கு அன்பு வேண்டுகோள், தற்கொலை எண்ணத்தை விடுங்கள்-மு.க.ஸ்டாலின்
மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள், தற்கொலை எண்ணத்தை விடுங்கள் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாதம் நடைபெற உள்ள ம் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.வருகின்ற 13-ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே , அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்துள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தநிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,நீட் பலிபீடத்தில் இன்னுமோர் உயிரிழப்பு. அரியலூர்-எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை. வேதனை! இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும்? மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்: எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; தற்கொலை எண்ணத்தை விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
#NEET பலிபீடத்தில் இன்னுமோர் உயிரிழப்பு!
அரியலூர்-எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை. வேதனை!
இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும்?
மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்:
எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; தற்கொலை எண்ணத்தை விடுங்கள்!— M.K.Stalin (@mkstalin) September 9, 2020