அத்திவரதர் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை ஜூலை 1 -ம் தேதி முதல் பக்கதர்கள் தரிசனத்திற்க்காக வைக்கப்பட்டது . அன்று முதல் முதல் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்கதர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 16- ம் தேதி கடைசி நாளாகவும் 17 ம் தேதி அத்திவரதர் மீண்டும் குளத்தில் இறக்கப்படுவார் என்று தகவல் வெளியானது .இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்கதர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர் 5 கிலோமீட்டருக்கு வரிசையில் நின்று வருகின்றனர்.
இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உய்ரநீதிமன்றத்தில் பிரபாகரன் என்ற வழக்கறிஞர் முறையிட்டார்.முதியவர்கள் மற்றும் இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் பார்க்கவில்லை எனவும் வாதிட்டார்.
மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முறையிட்ட வழக்கறிஞர் பிரபாகரனுக்கு நீதிபதிகள் அறிவுரை செய்தனர்.