ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு..! இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!
ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தரப்பு தீர்ப்பளித்தது. தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, ஈபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த நிலையில், ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.