ஸ்டெர்லைட் வழக்கு -விரைந்து விசாரிக்க மேல்முறையீடு..!
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூட நடவடிக்கை எடுத்த நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் திறக்க கோரிய மனுவை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, வேதாந்த நிறுவனம் இந்த அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கிடையில் மீண்டும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்த நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது!
ஆனால் மேல்முறையீடு செய்த பின்னர் அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும், அந்த மனுவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.