தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பு..!

சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று பகல் 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்தார்.
சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கும் வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இன்று காலை சட்டசபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார்.
அவரை சபாநாயகர் இருக்கைக்கு அமர கு.பிச்சாண்டி அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து சபை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர், துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவியேற்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024