தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி துவங்க உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Tamilnadu Speaker Appavu

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்போது கூறுகையில், “தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக கட்டடத்தில் தொடங்கும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வு குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர்.” எனக் குறிப்பிட்டார்.

“சட்டப்பேரவை நிகழ்வுகள் பகுதிநேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. விரைவில் முழு கூட்டத்தொடர் நிகழ்வுகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். திமுக ஆட்சியில் தான் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக காண்பிக்கப்பட்டு வருகிறது” எனவும் அப்பாவு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்