‘APP’ கொடுத்து ஆப்பு வைக்கும் தொழிலாளர்துறை..!தியேட்டர்களை எச்சரித்து..! இனி இப்படி நடக்க கூடாது அட்வைஸ்..!
திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் திரையரங்குகளுக்கு தமிழ்நாடு தொழிலாளர்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தெரிவித்த தமிழ்நாடு தொழிலாளர் துறை திரையரங்குகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுள்ளது.மேலும் 335 திரையரங்குகளை ஆய்வு செய்ததில், 72 இடங்களில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல்விலைக்கு விற்றது, தேதியில்லாமை போன்றவற்றிற்காக 114 வழக்குபதிவு செய்யப்படும்.என திரையரங்குகளை எச்சரித்துள்ளது.
இனி பேருந்து, ரயில்நிலையங்கள், ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது சாலையோர உணவகங்கள் போன்ற இடங்களில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.பெட்ரோல், டீசல் பங்க்குகளில் உணவின் அளவு குறைவாக விற்பனை செய்தாலும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
TN-LMCTS என்ற மொபைல் ஆப் மூலம் ரசிகர்கள் புகார் அளிக்கலாம் எனவும் தொழில்துறை அறிவித்துள்ளது.
DINASUVADU