அப்பலோ நிர்வாகம் ஜெ. சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது!

Default Image

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது அப்பலோ..
இரண்டு சூட்கேஸ்களில் மருத்துவ ஆவணங்களை கொண்டு சென்று விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தது அப்பலோ நிர்வாகம்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
Image result for arumugasamy commission
விசாரணை ஆணைய உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் கொண்டு சென்று தாக்கல் செய்தது அப்பலோ…
இதற்கு முன் தமிழக அரசு ஜெயலலிதா சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது……அந்த அறிக்கையின் விவரம் …
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் தொடர்பாக ஊடகங்களிலும், சில அரசியல் கட்சி தலைவர்களாலும் வதந்தி பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களிடம் இருந்து மருத்துவ அறிக்கையை பெற்று வெளியிட தமிழக அரசு முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த மருத்துவ அறிக்கைகள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ள தகவலை ஒத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Image result for apollo jayalalitha
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, சுவாசிக்க முடியாத நிலையில் அயற்சியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு நோய்த்தோற்று, நீர்சத்து குறைபாடு, சுவாச பிரச்சனைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்பே அவருக்கு நீரிழிவு, உயர்ரத்தஅழுத்தம் இருந்தது என்றும் ஆனால் சில அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுவது போல் காயம் அல்லது வேறு பிரச்சனை எதுவும் இல்லை என அப்பலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பலோ மருத்துவ குழுவினர், சிங்கப்பூர் பிசியோதரபிஸ்ட்டுகள், லண்டன் மருத்துவர் பீலே ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததுடன், அரசு சிறப்பு மருத்துவர்கள் 5 பேரும் தேவையான உதவிகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் கிலானி தலைமையிலான மருத்துவ குழுவினர் அக்டோபர் 5ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே ஜெயலிதாவுக்கு தவறான மருந்து எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் ரத்த அழுத்ததிற்கான மருந்துகளையே அவர் எடுத்துக் கொண்டிருந்தததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது காவேரி விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும், வாய் வழியாக உணவு எடுத்துக் கொள்ளும் விதத்தில் அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எதிபாராவிதமாக டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலிழப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவ நிபுணர்கள் தேவையான சிசிச்சை அளித்த போதும் அவரது இதயம் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தம்பித்துரை, சசிகலா மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி இரவு 11 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அப்போலோ மருத்துவமனையும் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது ..
source: dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்