மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.
ஹிந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டமூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் என தெரிவித்திருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கனிமொழி எம்.பி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அவர்கள் பேசியிருப்பது இந்தித் திணிப்பு. இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…