அதிமுக ஒற்றைத் தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனா இது கன்பாம் – பொன்னையன்
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என அமைப்பு செயலாளர் பொன்னையன் பேட்டி.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், வைகை செல்வன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்னையன், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுப்பார்கள்.
ஒற்றைத் தலைமை என்பது தவறில்லை. அதிமுக ஒற்றைத் தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். பொதுக்குழுவில் தீர்மானங்களில் கட்டாயம் கையெழுத்து இடப்படும் என்றும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த முடிவுகள் பற்றி பேசப்படுமா என்பது குறித்து எனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுக்கும், ஒற்றை தலைமைக்கும் சம்பந்தமில்லை. ஒற்றை தலைமை கோரிக்கையை தவறு என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
இந்த முடிவை பொதுக்குழு எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் நாளை இறுதி செய்யப்படும். நாளை நடைபெறும் பொதுக்குழு, செயற்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். மேலும், திட்டமிட்டபடி, பொதுக்குழு கூட்டம் 100 சதவீதம் நடைபெறும் என தெரிவித்தார்.