எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை…… அவர்களுக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்வேன் : சரத்குமார்
- எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க என எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்தே பிரசாரம் செய்வேன்.
- அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் ஏழு கட்டமாக நடக்கவுள்ள இந்தத் தேர்தலில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.itharkaaga
இந்நிலையில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சி இந்தத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் என்றிருந்த நிலையில், திடீரென அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனித்துப் போட்டி என்றிருந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களுக்காகப் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார், மோடிக்கு எதிராகப் பேசிவிட்டு தற்போது மோடிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, `சமத்துவம், சகோதரத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எந்தக் கட்சியாக இருந்தால் என்ன? அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க என எல்லாக் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்தே பிரசாரம் செய்வேன்” என சரத்குமார் தெரிவித்துள்ளார்.