தமிழக எம்.பிகளுக்கு பேச தகுதியில்லை.? மத்திய அமைச்சரின் பேச்சால் பெரும் சர்ச்சை.!
டெல்லி: கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தமிழக எம்பிக்களை விமர்சனம் செய்துள்ளார்.
18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற விவாதங்களுக்காக தொடங்கிய கூட்டத்தொடர் முழுவதும் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் கூடியது.
இன்றைய நாள் அவையின் தொடக்கத்திலேய நீட் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். அந்த சமயம் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில், தமிழக எம்பிக்களுக்கு மக்களவையில் பேச தகுதியில்லை என்பது போல குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி விவசாராய உயிர்ப்புகள் குறித்து குறிப்பிட்டு அனுராக் தாகூர் இவ்வாறு குறிப்பிட்டார் இதனை எதிர்த்து தமிழக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு வந்தாலும் மிகச்சிலர் இன்னும் சிகிச்சை பெற்றுக்கொண்டு உள்ளனர். இதனை குறிப்பிட்டு தான் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தமிழக எம்பிகளை விமர்சித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.