கோடநாடு வழக்கில் போலீஸ் மேல்விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அனுபவ் ரவி மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்ததான விசாரணையில் போலீஸ் மேல் விசாரணைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போலீஸின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி போலீஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவ் ரவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதாகவும், அவர்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில், கோர்ட் அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கை விரைந்து முடிக்க விசாரணை கோர்ட்டுக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸ் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்து அனுபவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக அனுபவ் ரவி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கை போலீஸ் மேல் விசாரணை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், இது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அதை கருத்தில் கொள்ளாமல் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளதாகவும், கோடநாடு வழக்கை மேல் விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…