எறும்பு, தேனி போல் உழைக்க வேண்டும் முதல்வர் வேண்டுகோள்…!!
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
- ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தொண்டர்கள் எறும்பு, தேனி போல் உழைக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள்விடுத்தார்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயாலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா அதிமுக தலைமைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் சென்னை வடபழனியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை அதிளகவில் அம்மாவின் அரசு ஈர்த்துள்ளதாகவும், இதனைக் கண்டு ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தொடர்ந்து ஸ்டாலின் குறை கூறி வருவதாகவும் தமிழக முதல்வர் கூறினார்.மேலும் அவர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற, அதிமுக தொண்டர்கள், எறும்பு, தேனி போல் உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார்.