கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டு எடுக்கப்பட்டதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில், மே 22-ம் தேதி முதல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து ஆய்வுகள் நடைபெறுகிறது எனவும், ஆய்வு முடியவும் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது என தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதற்க்கு முன், பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த எலும்பு, சுமார் 3 மீட்டர் அளவில் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அரசு முறைப் பயணமாக 2 நாள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் கள ஆய்வை நேற்று…
விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை…
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…